பொருளடக்கத்திற்கு தாவுக
ஜனவரி 20, 2009 / Venkatesh A.G.E

Bajaj Allianzல் பாலிசி எடுத்தவர்கள் கவணத்திற்கு!!

ஓரு முகவர் மூலம் 2007 ஆண்டு Bajaj Allianzல், பாலிசி எடுத்தேன். மூன்றான்டுகள் மட்டும் பணம் கட்டினால் போதும் 20 ஆண்டுகள் வரை அந்த பாலிசி பலன் தரும் எனவும் 3 ஆண்டுகள் லாக்இன் பீரியட் எனவும் 4 ஆம் ஆண்டு கட்டிய பணத்தை விரும்பினால் எந்த கட்டணமும் இல்லாமல் திரும்ப பெற முடியும் எனவும் ஒரு கிளை மேளாலரால் மடிக்கணினி மூலம் தெளிவாக விளக்கப்பட்டது.

இதன் பொருட்டு என் சுற்றத்தாருக்கும் இதை பரிந்துரைத்தேன். நானும் ஒரு பெரும் தொகையை முதலீடு செய்தோன். இரண்டு வருடங்கள் கட்டிய பிறகு சில நாட்களுக்கு முன் ஒரு விளக்கத்திற்காக கிளைக்கு சென்று விசாரித்ததில் முதலில் கூறிய எந்த நடைமுறையும் இல்லை என்றும் 20 ஆண்டுகள் நான் பணம் கட்ட வேண்டும், இல்லை என்றால் பாலிசி காலாவதியாகிவிடும் எனவும், மீறி 4 ஆம் வருடம் திரும்ப பெற நினைத்தால் மீதம் உள்ள பணத்தில் 55.90 விழுக்காடு கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

இது குறித்து கிளை அதிகாரியை பார்க்க வேண்டும் என தெரிவித்த போது மார்கெட்டிங் மேனேஜரை கொண்டு போச்சுவார்த்தை நடத்துகிறார்களே தவிர ஒரு உரிய பதில் தரவில்லை. மேலும் அந்த மார்கெட்டிங் மேனேஜர் ”வாங்குறவனுக்தான் அக்கற இருக்கனும் விக்கரவன் எதையாவது சொல்லிதான் விப்பான்” என பொறுப்பற்ற முறையில் கூறுகிறார்.

55.90 விழுக்காடு கட்டணம் என்பதை பலிசி டாக்குமெண்டில் ஒரு சாதாரண மனிதன் புரிந்துகொள்ள முடியாத படி கணித குறியீடான 1-(1/1.09)^N இதை காண்பித்தனர் அதை விளக்க சென்னபோது விளக்க முடியாமல் திணறினர். ஆனால் 55.90 விழுக்காடு கட்டணம் உண்டு என சொல்கிறார்கள். இதை எழுத்து மூலம் தரவும் மறுத்துவிட்டார்.

நான் கேட்ட அல்லது எனக்கு விளக்கப்பட்ட பாலிசியை எனக்கு அவர்கள் தரவில்லை அதற்கு பதில் ஏதோ ஒன்றில் என்னை மாட்டிவிட்டு அலைகழிக்கிறார்கள்.

என்னைப்போல் மேலும் ஒருவரும் இதே பிரச்சனையில் உள்ளது தெரியவந்துள்ளது.

இணைய நண்பர்களே!! இது போன்ற அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டிருந்தாலும் அல்லது அறியாமல் இருந்தாலும் உடன் உங்களுக்கு அருகில் உள்ள Bajaj Allianz கிளையை அனுகி விளக்கம் பெறவும்

  1. நாமக்கல் சிபி / Jan 20 2009 1:29 பிற்பகல்

    //நான் கேட்ட அல்லது எனக்கு விளக்கப்பட்ட பாலிசியை எனக்கு அவர்கள் தரவில்லை அதற்கு பதில் ஏதோ ஒன்றில் என்னை மாட்டிவிட்டு அலைகழிக்கிறார்கள்.//

    1. விண்ணப்பத்தை பூர்த்தி செய்யாமல் கையொப்பம் பெற்றிருப்பார்கள்! நீங்களும் மறுக்காமல் கையொப்பம் இட்டிருப்பீர்கள்!

    முதலில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பின் டேபிள்/டெர்ம்ஸ் போன்ற விவரங்கள் உங்களிடம் கூறப்பட்டவைதானா என்று சரி பார்த்த பிறகே கையொப்பம் இட வேண்டும்!

    2. காப்புறுதிப் பத்திரம் உங்களை வந்தடைந்த பிறகு உங்களிடம் கூறப்பட்ட விஷயங்கள் அனைத்தும் உள்ளனவா என்று சரிபார்க்க 15 நாட்கள் அவகாசம் உண்டு! சரி அல்ல என்று தெரிந்தால் 15 நாட்களுக்குள் திருப்பிக் கொடுத்துவிட்டு பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று ஐ.ஆர்.டி.ஏ வழிமுறைகள் உள்ளன!

    அப்பொழுதேனும் சரிபார்த்துக் கொள்வது சாலச் சிறந்தது!

    மேலும் விபத்துக் காப்புறுதி, பென்ஷன் திட்டங்கள் என்று எதில் முதலீடு செய்தாலும் அவை அனுத்தும் 100%, 50% 25% என்று பங்கு வர்த்தகங்களில் முதலீடு செய்யப் படுகின்றன!

    அவற்றையும் தெளிவாகக் கேட்டு, முதலீட்டு சதவீதங்கள் எவ்வளவு என்பவையும் நீங்கள் கேட்டுக் கொண்டவாறே தெளிவாக விண்ணப்பத்தில் குறிப்பிடப் பட்டுள்ளனவா என்பதையும் சரிபார்த்துக் கொள்ளுதல் அவசியம்!

  2. நாமக்கல் சிபி / Jan 20 2009 1:37 பிற்பகல்

    ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் மீதான பிரச்சினைகளை/டிஸ்பியூட்களை விசாரிக்க ஒவ்வொரு ஆயுள் காப்பீட்டு நிறுவனமும் ombudsman என்ற ஒருவரை நியமித்திருக்கும்! அந்தந்த அலுவலகத்திலேயே ombudsman என்பவரின் பெயர், முகவரி, தொடர்பு எண்கள் முதலானவை வாடிக்கையாளர்களுக்குத் தெரியும்படி வைத்திருக்க வேண்டும் என்பது ஐ.ஆர்.டி.ஏ வகுத்துள்ள நெறிமுறைகளில் ஒன்று!

    நீங்கள் அவரிடம் உங்கள் பிரச்சினைகளைக் கொண்டு செல்லலாம்!

  3. நாமக்கல் சிபி / Jan 20 2009 1:43 பிற்பகல்

    1) Who can approach the Ombudsman?
    Any individual who has taken an Insurance Policy or, the legal heirs under such policy, can approach Ombudsman.

    2) Can we approach the Ombudsman with complaints that have been already launched in a Forum / court on the same subject?
    No. Any complaint on the same subject matter, which is already before a Court / Consumer Forum, cannot be submitted to the Ombudsman.

    3) Is there any formal procedure for lodging a complaint with the Ombudsman?
    Yes. The Procedure is very simple. The complaint can be written in a plain paper and be submitted. If the complaint falls within the terms of reference, the forum will issue specific forms to the complainant.

    4) Is there any fees / charges payable to the Ombudsman for lodging a complaint?
    No. There is no fees/charges that need to be paid to lodge a complaint.

    5) Is there any time limit to approach the Ombudsman?
    Yes. One year from the date of rejection by the insurer or from receiving the Insurer’s final reply to the complainant’s representation.

    6) Is there any maximum limit for the amount under dispute that can be entertained by the Ombudsman?
    Yes. The maximum limit for the amount under dispute is Rs. 20 lakhs

    மேலதிகத் தகவல்களுக்கு :
    http://www.medindia.net/patients/insurance/Health_Insurance_Ombudsmen_faqs.htm

  4. வெங்கடேஷ் / Jan 20 2009 2:11 பிற்பகல்

    தகவலுக்கு நன்றி நாமக்கல் சிபி!

    எழுத்துபிழைகளுக்கு மன்னிக்கவும்.
    நான் இப்போதுதான் பிழையில்லாம் எழுத பழகுகிறேன். விரைவில் சரிசெய்வேன்

  5. சரவணகுமரன் / Jan 20 2009 2:14 பிற்பகல்

    :-( (

  6. sharun / Jan 20 2009 2:14 பிற்பகல்

    அச்சச்சோ….அப்படியா? நான் தப்பித்தேனா????ஒருவர் பின்னாலேயே அலைந்தார்….என்னென்னவோ சொல்லியும் நல்லவேளை மாட்டிக் கொள்ளவில்லை..
    அன்புடன் அருணா

  7. நாமக்கல் சிபி / Jan 20 2009 3:12 பிற்பகல்

    என்னையும் ஃபாலோ பண்னிகிட்டேதான் இருந்தாங்க! இன்னிக்கு கால் வந்தப்போ நான் சத்யமிலேர்ந்து லே ஆஃப்லே வேலை இழந்துட்டேன்னு சொன்னேன்!

    “ஸாரி சார் ஒரு ரெண்டு மூணு மாசம் கழிச்சி பார்க்கறோம்னு” சொல்லி வெச்சிட்டாங்க

  8. Cinema Virumbi / Jan 20 2009 3:34 பிற்பகல்

    Friend,

    I can try to explain the first principles of the formula. If someone gives you one rupee today, you can deposit it in a bank and get, say, 9% interest per year. After 9.5 years, this one rupee will become Rs 2.267. Alternatively, one rupee on 9.5th year from today is equivalent to 1/ 2.267= Rs 0.44101 today. They are trying to use this theory and take away from you 55.90 paise for every one rupee they promised you 9.5 years from today. Pl. see if this explanation helps you.

    Regards,

    Cinema Virumbi

  9. Cinema Virumbi / Jan 20 2009 3:41 பிற்பகல்

    நாமக்கல் சிபி,

    பேச்சு வார்த்தையால் ஒரு பயனும் இல்லை, நேரமும் தொண்டத்தண்ணியும்தான் வீணாய்ப் போச்சு என்பதைக் குறிக்கத்தான் வலைப்பதிவர் symbolic காகப் ‘போச்சு வார்த்தை’ என்கிறாரோ என்னவோ?!

    சினிமா விரும்பி

  10. நாமக்கல் சிபி / Jan 20 2009 7:57 பிற்பகல்

    //பேச்சு வார்த்தையால் ஒரு பயனும் இல்லை, நேரமும் தொண்டத்தண்ணியும்தான் வீணாய்ப் போச்சு என்பதைக் குறிக்கத்தான் வலைப்பதிவர் symbolic காகப் ‘போச்சு வார்த்தை’ என்கிறாரோ என்னவோ?!//

    இருக்கும் இருக்கும் யாரு கண்டா?

  11. kalyanakamala / Jan 21 2009 2:50 மு.பகல்

    //என்னையும் ஃபாலோ பண்னிகிட்டேதான் இருந்தாங்க! இன்னிக்கு கால் வந்தப்போ நான் சத்யமிலேர்ந்து லே ஆஃப்லே வேலை இழந்துட்டேன்னு சொன்னேன்!//

    !!!!!!!!!!!!!!!!!!!!!!!! God !very good !
    kamala

  12. Juergen Krueger / Jan 21 2009 11:57 மு.பகல்

    ஆஹா மாட்டிகிட்டேன் போலேருக்கே?? உடனே சுதாரிக்கனுமே…..!

    தகவலுக்கு நன்றி சார்!

  13. மஞ்சூர் ராசா / Jan 21 2009 12:35 பிற்பகல்

    என் நெருங்கிய உறவினரின் வற்புறுத்தலின் பேரில் நானும் இதேபோல் ஒரு பாலிஸி எடுத்திருக்கிறேன். மூன்று வருடங்கள் கட்டினால் போதும் என்று சொன்னதாலேயே எடுத்தேன். இப்போது மூன்று வருடங்களுக்கும் கட்டிவிட்டேன். நீங்கள் சொல்வதை பார்த்தால் குழப்பமாக இருக்கிறது.

    இந்த பாலிஸி எடுப்பதன் மூலம் ஏஜெண்டுகளுக்கு நல்ல கமிஷன் கிடைக்கிறது என கேள்விப்பட்டேன். அதனாலேயே எப்படியாவது தலையில் கட்டிவிடுகின்றனர்.

  14. softee / Jan 21 2009 12:59 பிற்பகல்

    எனக்கும் இதே பிரச்சனைதான்

    எப்படி இதிலிருந்து வெளி வருவது என்று தெரியவில்லை.

    தயவு செய்து யாராவது உதவுங்களேன்.

  15. Basheer / Jan 22 2009 3:31 பிற்பகல்

    இது Bajaj Allianz ல் மட்டும் தானா, இல்லை LIC, SBI Unit plus போன்றவற்றில் உள்ள 3 வருட திட்டமும் இப்படி தானா?
    யாராவது தெரியப்படுத்துங்களேன்

  16. kuppan_yahoo / Jan 22 2009 4:18 பிற்பகல்

    this private insurance companies all are cheating, same with Aviva, Tata AIG etc.

    Better take policy with LIV, Nationla Insurance, new India insurance, Orinetal & United.

    Greedy persons wil not get justice.

  17. குறும்பன் / Jan 23 2009 3:59 மு.பகல்

    TATA-AIG ஐம் கிட்டதிட்ட இதே மாதிரி தான் சொன்னாங்க. பெரிய நிறுவனம் பொய் சொல்ல மாட்டாங்கன்னு நம்பி பணத்தை போட்டிருக்கேன். :-(

  18. நாமக்கல் சிபி / Jan 23 2009 10:33 மு.பகல்

    எந்த ஒரு நிறுவனத்தின் காப்பீடாக இருந்தாலும் சரி! (அது எல்.ஐ.சி போன்ற அரசுடைமையாக்கப்பட்டதெனினும் கூட) ஏஜெண்டுகள் சொல்வதை அப்படியே நம்பத் தேவை இல்லை! பாலிஸி பத்திரம் கைக்கு வந்தவுடன் அந்த ஏஜெண்டினை அழைத்து அந்த எஜெண்டு கூறிய அனைத்தும் அந்த பாலிஸி பத்திரத்தில் தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளதா என்று சரிபார்க்கலாம்.

    அவ்வாறு இல்லையெனில் பாலிஸியை திருப்பிக் கொடுத்துவிட்டு (15 நாட்களுக்குள்) அந்த ஏஜெண்ட் மீது ஐ.ஆர்.டி.ஏ வில் புகார் செய்யலாம்!

    ஏஜெண்ட் கோடு எண்ணை நீங்கள் கேட்டுப் பெற்றுக் கொள்வது நல்லது! அவரது அடையாள அட்டையை வாடிக்கையாளர் கேட்கும்போது முகவர் காண்பிக்க வேண்டும் என்றும் ஐ.ஆர்.டி.ஏ வலியுறுத்துகிறது!

  19. வெங்கடேஷ் / Jan 23 2009 10:46 மு.பகல்

    நன்றி நாமக்கல் சிபி!!
    தங்களின் பின்னூட்டங்கள் நிச்சயம் பலன் தருகிறது. இது வரை எனக்கு 100க்கும் அதிகமானோர் தொலைபேசியில் அழைத்து தாமும் இதுபோன்றே மாட்டிக்கொண்டதாகவும் இதற்கு ஏதாவது தீர்வு உண்டா என்றும் கேட்கிறார்கள். நானும் கேட்கிறேன் எங்களுக்கு ஏதாவது தீர்வு உண்டா?

    வெங்கடேஷ்

  20. Perse / Jan 23 2009 1:16 பிற்பகல்

    please refer your complaint to IRDA

  21. tsr / Jan 23 2009 2:16 பிற்பகல்

    இன்சூரன்ஸ் நிறுவனங்கள் யூலிப் என்று பெயர் சூட்டி, அதை பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி, அதில் மிகச்சிறிய தொகையை மட்டும் பிரிமியத்திற்கும், 65 % தொகயை நிறுவன செலவுகளுக்கும் எடுத்துக் கொண்டு மிச்சத்தை மட்டும் சந்தையில் இடுவார்கள். நாம் கொடுக்கும் முன்மொழிவுடன் இல்லஸ்ட்ரேஷன் என்ற படிவத்தை தர வேண்டும். அதில் இன்சூரன்ஸ் ஆணையத்தின் விதிமுறைகள் படி, நாம் செலுத்தும் தொகை ஒவ்வொரு ஆண்டும் செலவுகள் போக 6% அல்லது 10% வளர்ந்தால் எவ்வளவு கிடைக்கும் என்று இருக்கும். இதை பாலிஸி எடுக்கும் அனைவரும் படித்து பார்த்து கையெழுத்து இடவேண்டும். மற்றபடி மடிக்கணிணி விஷயமெல்லம் படம் காட்டிவிட்டு எடுத்துச் செல்வதற்குத்தான் –எந்த சாட்சியும் இல்லாமல்.
    ஒருவேளை நீங்கள் இல்லஸ்ட்ரேஷன் படிவத்தில் கையெழுத்துப் போடாமல் இருந்தால் அவர்களை கன்ஸ்யூமர் கோர்ட்டிற்கு இழுக்கலாம். நீங்கள் கொடுத்த படிவம் அனைத்தையும் நகல் எடுத்துக் கொடுக்கச் சொல்லி விண்ணபிக்கவும்.
    அனைத்து தனையார் நிறுவங்களும் துவங்கப்பட்டவை என்பதை(கொள்ளை)லாப நோக்கத்திற்காக அறியவும்.

  22. நாமக்கல் சிபி / Jan 23 2009 3:59 பிற்பகல்

    //ஒருவேளை நீங்கள் இல்லஸ்ட்ரேஷன் படிவத்தில் கையெழுத்துப் போடாமல் இருந்தால் அவர்களை கன்ஸ்யூமர் கோர்ட்டிற்கு இழுக்கலாம். நீங்கள் கொடுத்த படிவம் அனைத்தையும் நகல் எடுத்துக் கொடுக்கச் சொல்லி விண்ணபிக்கவும்.//

    பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தின் நகலை பாலிசி பத்திரத்தோடு உங்களுக்கு அனுப்பி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்!

  23. நாமக்கல் சிபி / Jan 23 2009 4:01 பிற்பகல்

    //அனைத்து தனையார் நிறுவங்களும் துவங்கப்பட்டவை என்பதை(கொள்ளை)லாப நோக்கத்திற்காக அறியவும்.//

    இது அப்பட்டமான உண்மை!

  24. நாமக்கல் சிபி / Jan 23 2009 4:07 பிற்பகல்

    //நன்றி நாமக்கல் சிபி!!
    தங்களின் பின்னூட்டங்கள் நிச்சயம் பலன் தருகிறது. இது வரை எனக்கு 100க்கும் அதிகமானோர் தொலைபேசியில் அழைத்து தாமும் இதுபோன்றே மாட்டிக்கொண்டதாகவும் இதற்கு ஏதாவது தீர்வு உண்டா என்றும் கேட்கிறார்கள். நானும் கேட்கிறேன் எங்களுக்கு ஏதாவது தீர்வு உண்டா?//

    இவர்கள் மட்டுமல்ல!
    இன்னும் எண்ணற்ற கணக்கில் இருக்கிறார்கள்!

    இது போன்ற நிறுவனங்களிடம் முறையிடும்போது முகவர்களை கை காட்டி விடுவார்கள்! முகவர்களைக் கேட்டால் பாலிஸி விற்பனை செய்ய எங்களுக்கு அப்படித்தான் பயிற்சி அளித்ததாகச் சொல்வார்கள்!

    ஒரு குழுவாகச் சேர்ந்து ஐஆர்டிஏ வில் முறையிட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்று எண்ணுகிறேன்!

    உங்களிடம் தொடர்பு கொண்ட அனவரிடமும் (சிலரிடமாவது) விவரங்கள் சேகரியுங்கள். நானும் இதுபற்றி மேலதிக தகவல்களுக்கு முயற்சிக்கிறேன்!

    நிச்சயமாக ஐஆர்டிஏ மூலம் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்! முறையிடுபவர்களுக்கு மட்டுமின்றி ஏனைய பலருக்கும் நல்ல தீர்வாக இருக்கட்டும்!

    நன்றி!

  25. KRV / Jan 23 2009 6:34 பிற்பகல்

    முதலில் investment-ஐயும், insurence-ஐயும் தனித்தனியே செய்ய வேண்டும்.
    investment-க்கு Mutual fund-ம்,insurence-க்கு Term Insurence தான் நிலையான தீர்வு.
    என்னை பொருத்த வரை ULIP என்பது ஒரு ஏமாற்று வேலை.
    ULIP-கள் சிறந்தவையென யாராவது நிரூபிக்க தயாரா. . .?

  26. வெங்கடேஷ் / Jan 24 2009 11:50 மு.பகல்

    நீங்கள் கூறும் அந்த Bajaj Allianz திட்டம் எது என்று எனக்கு விளங்கவில்லை. எனினும், நானும் பஜாஜ் அலையன்ஸாரின் பரஸ்பர சகாயநிதி (Mutual Fund) திட்டம் ஒன்றில் கடந்த வருடம் என்னை இணைத்துக் கொண்டேன்.

    RMP Infotec Private Limited என்ற கம்பெனி Multi-Level Marketting முறையில் இத்திட்டத்தினை விற்றபோது, நானும் எனது நண்பர்களும் அதன் 15-ஆண்டுகால திட்டமொன்றில் இணைந்தோம்.

    குறைந்த பட்சம் மூன்று வருடங்களுக்குத் தவணைத் தொகையை செலுத்தினால் போதும் என்றும், 4-ஆம் ஆண்டு முதல் எப்போது விரும்பினாலும் அதுவரை செலுத்தப்பட்டத் தொகையில் பகுதியளவை கட்டணம் எதுவும் செலுத்தாமல் திரும்பப் பெற்றுக்கொள்ளலாமென்றும் (partial withdrawal) பஜாஜ் அலையன்ஸின் New Family Gain என்ற அத்திட்டத்திற்கான விளம்பரம் கூறியது. இது ஒரு unit linked life insurance policy. NRIகளுக்காகவே சிறப்புச் சலுகைகளுடன் வழங்கப்பட்ட பாலிசி என்றே முகவர் எங்களிடம் கூறினார்.

    இன்று, இந்தத் திட்டத்திற்கான இரண்டாவது தவணைத் தொகையை செலுத்துவதற்கு முன்பாக, இத்திட்டம் குறித்த சில ஐயப்பாடுகளைக் களைந்துகொள்ள வேண்டி நானும் பஜாஜ் அலையன்ஸ் கம்பெனியாரை அணுக நினைக்கிறேன்.

    அணுகவேண்டிய முகவரி இதுவாகத்தான் இருக்கும் என இணையத்தின் மூலம் அறிகிறேன்:

    Bajaj Allianz General Insurance Co Ltd. Pune Head Office GE Plaza 1 st Floor
    Airport Road, Yerawada
    Pune 411006
    TOLL FREE Numbers:
    BSNL 1800- 233- 7272
    TATA 1800- 209- 7272
    Bharti 1800- 103- 7272
    Reliance 1800-3000-7272
    மின்னஞ்சல்: life@bajajallianz.co.in
    தொலைபேசி: (020) 30587888

    நீங்களும் இதில் தொடர்புகொள்ள முயற்சிசெய்து பாருங்களேன்.
    மேலும் உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும். நன்றி.

    அன்புடன்,
    வ.வெங்கடேஷ்
    தோஹா, கத்தார்.

  27. வெங்கடேஷ் / Jan 24 2009 11:55 மு.பகல்

    //முதலில் investment-ஐயும், insurence-ஐயும் தனித்தனியே செய்ய வேண்டும்.//

    KRVயின் இந்தக் கருத்தோடு முழுவதுமாக உடன்படுகிறேன்.
    Life Insuranceல் முதலீடு செய்யும்போது அதிக பணவரவை எதிர்ப்பார்க்கக் கூடாது. என்னதான் கவர்ச்சிகரமான் திட்டங்களை ஆயுள் காப்பீட்டு கம்பெனீயார் கொண்டுவந்தாலும், அத்திட்டங்களில் முதலீட்டு நோக்கத்தைவிட காப்பீட்டு நோக்கமே பிரதானமாக இருக்கும்.

  28. thangavelmanickam / Jan 26 2009 3:21 மு.பகல்

    என்னை விடாமல் தொரத்திய நண்பிக்கு இதுவரை பதில் சொல்லாமல் தப்பித்ததை நினைத்தால் … இந்த நண்பி முதலில் கோல்ட் குவெஸ்ட் அறிமுகப்படுத்தினார். மறுத்துவிட்டேன். பின்னர் பஜாஜ் அலையன்ஸ் எம் எல் எம் ஸ்கீமைக் கொண்டு வந்தார். கோல்ட் குவெஸ்ட் என்ன ஆச்சு என்று கேட்டேன். அதையெல்லாம் அப்போதே விட்டு விட்டோம் என்றார்கள். ஏன் என்று கேட்டபோது அவர்கள் சரியில்லை என்று கூசாமல் சொன்னார்கள். உங்க டவுண்லிங்க் என்ன ஆனார்கள் என்று மீண்டும் கேட்க ஏதோ சொல்லி சமாளித்து விட்டு அன்றிலிருந்து தொடர்பை துண்டித்தார்கள்.

    நாம் தான் சற்று முன் யோசனையுடன் நடந்து கொண்டு இப்படிப்பட்ட நட்புத் திருடர்களிடமிருந்து தப்பிக்க வேண்டும்

  29. Nagappan / Feb 7 2009 6:02 மு.பகல்

    I take one policy from Bajaj alliance thru
    standard charted bank credit card. They provide inter id and password. I check with website they accounted only 20 % of my first year premium. I ask them why? they told that balance is administrative charges. Immediatly i surrendered the policy within 15 days of issue and ask them for refund. SC Bank told me that Bajaj still not refund the money to my account. I follow up with Bajaj and got my money after 2 months only. Beware about the company. Just invest in LIC. Growth may be slow, but there is no hidden agenda in their policies.

  30. Thangavelu / ஜூலை 8 2009 11:06 மு.பகல்

    epadi irunthalum policy english-il ullathu/sria elutilil ullathu adhipadithu purinthukolla satharana manitharkalal mudiathu.reginal language-aaka irunthalmadum idhupondra kuraikali kandarialam

  31. Mothiram / Jan 8 2010 4:46 மு.பகல்

    All the investment are based Shares/Bond. So you watch and plan to return

  32. சன்முகம் / Dec 25 2010 2:42 பிற்பகல்

    நன்பர்களே! நானும் இதே போன்றுதான் மாட்டிக்கொண்டேன். நான் எனது நன்பர் மூலம் எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் பஜாஜ் அலையன்ஸ் பாலிசி எடுத்தேன். அந்த முகவரும் நீங்கள் அனைவரும் கூறிய அதே வார்த்தையை கூறி ஒரு பெரும் தொகையை முதலீடு செய்ய சொன்னார்கள். அப்போது என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றேன். அதற்க்கு ஒன்றும் கவலைப்படாதீர்கள் தற்போது நான் கட்டிவிடுகிறேன் உங்களை முகவராக TLC என்ற கம்பெனி மூலம் ஆக்கிவிடுகிறேன். என்றும் உங்களின் நண்பர்களை அறிமுகப் படுத்தினால் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றும், ஒரு குறிப்பிட்ட பாலிசிதாரர்களை இணைத்தால் கார், பைக், சுற்றுலா என்றெல்லாம் கூறி என்னை மாட்டிவிட்டனர். என்னால் அப்பெரும் தொகையை திருப்பித் தருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ஒருவழியாக கடனை வாங்கி அவர் தந்த தொகையை அந்த முகவருக்கு கொடுத்து விட்டேன். மேற்கொண்டு அடுத்த பிரிமியங்களை என்னால் கட்ட முடியவில்லை. தற்போது அதை Withdraw பன்ன Customer Care Toll Free Noக்கு அழைத்தேன். அவர்கள் உங்களது பாலிசிகள் அனைத்தும் காலாவதி ஆகிவிட்டன. இனி மேற்கொண்டு புதுப்பிக்கவும் முடியாது மற்றும் கட்டிய தொகையை பெறவும் முடியாது என்று கூறி என்னை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளனர்.

    கட்டிய பணத்தில் Service Charge ஆக ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்துக்கொள்ளட்டும் மீதம் உள்ள தொகையை பெற வழி எதாவது உண்டா?

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.