பொருளடக்கத்திற்கு தாவுக
ஜனவரி 21, 2009 / Venkatesh A.G.E

திரட்டிக்கு பயன்படுத்திய மென்பொருட்கள்!!

திரட்டி.காம் இன்றுடன் 13 மாதங்களை கடந்திருக்கிறது. இது வரை நான் திரட்டியை வடிவமைக்க பயன்படுத்திய மென்பொருட்கள் பற்றியும் அதற்கு உதவியவர்கள் பற்றியும் இந்த பதிவு.

நான் முதலில் பயன்படுத்தியது திறவுமூல மென்பொருளான Lylina rss aggregator ஐ தான், இதை முகுந்த் அவர்களின் தமிழ்பிளாக்ஸ்.காம் தளத்தின் மூலமே அறிந்து பயன்படுத்தினேன்.

இதில் பல பிரச்சனைகளை சந்திக்கவேண்டியிருந்தது முதல் 3 மாதங்கள் மட்டுமே பயன்படுத்தினேன்.

இரண்டாவதாக நான் பயன்படுத்தியது FoFRedux எனும் திறவுமூல மென்பொருளை, மிகவும் எளிதான, எனக்கு பிடித்த, மென்பொருள் இது. இந்த மென்பொருளை தமிழ்சசியின் பதிவின் மூலமே அறிந்து கொண்டேன். இந்த மென்பொருளின் சில பிரச்சனைகள் காரணமாக புதிய வசதிகள் எதையும் அறிமுகம் செய்ய முடியவில்லை இருப்பினும் பதிவர்களின் திரைவெட்டை முதலில் காண்பிக்கும் படி வடிவமைத்திருந்தேன். பிறகு பதிவின் படங்களை காட்டும் படி வடிவமைத்தேன் நண்பர்கள் பலர் இதை பாராட்டினர்.

முகப்பு பக்கத்திற்கு wordpress தளத்தின் template ஒன்றை கஸ்டமைஸ் செய்து பயன்படுத்தினேன்.

தற்சமயம் அதிக பதிவர் மற்றும் பதிவை திரட்டும் வேகத்திற்காகவும் வழங்கியின் பலுவை குறைக்கும் விதத்தில் மேலே குறிப்பிட்ட எந்த மென்பொருளையும் பயன்படுத்தாமல் SimplePie ஐ பயன்படுத்தி நானே சொந்த திரட்டி மென்பொருளை வடிவமைத்துவிட்டேன். சில FoF வசதிகளையும் பயன்படுத்திக்கொள்கிறேன்.

இப்போது திரட்டியின் வேகம் கூடியிருப்பதுடன் திரட்டும் திறனும் மேம்பட்டிருக்கிறது.

  1. உண்மைத்தமிழன் / Jan 21 2009 3:29 பிற்பகல்

    நன்றி வெங்கடேஷ்..
    தங்களைப் போன்ற படித்த அன்பர்களின் ஒவ்வொரு படைப்பும் தமிழுக்கு நீங்கள் செய்கின்ற தொண்டு போலத்தான்..
    வலைப்பதிவுகளுக்கு நீங்கள் கொடுக்கும் ஊக்கத்திற்கும், ஒத்துழைப்பிற்கும் எனது நன்றி..

    வாழ்க வளமுடன்

  2. Ram / Jan 22 2009 1:10 பிற்பகல்

    தமிழ்மண நட்சரத்திற்கு வாழ்த்துக்கள்

  3. கலை - இராகலை / Jan 24 2009 6:18 மு.பகல்

    நட்சரத்திற்கு வாழ்த்துக்கள்

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.