பொருளடக்கத்திற்கு தாவுக
ஜனவரி 30, 2009 / Venkatesh A.G.E

முத்துக்குமார் குடும்பத்திற்கு இளைஞர்கள் மாணவர்கள் சேர்ந்து 20 லட்சம் திரட்டி தர முடிவு

வீரமரணம் அடைந்த முத்துக்குமாருக்கு தமிழக அரசு ரூ 2 லட்சம் வழங்க முடிவுசெய்துள்ளது, இதனை எதிர்த்து இளைஞர்களும் மாணவர்களும் IT துறையில் பணிபுரிபவர்களும் சேர்ந்து ரூ 20 லட்சத்தை உலக நாடுகளில் உள்ள அனைத்து தமிழர்களிடமும் திரைப்படத்துரையினறிடமும் திரட்டி தர முடிவு செய்துள்ளனர்.

  1. Tamil Sasi / Jan 30 2009 5:31 பிற்பகல்

    Good Development, We don’t need government money. we should throw it at Karunanidhi’s face.
    Nor should we allow the big Media to raise money.

    World Tamils should donate for this cause. let’s go to the people. let’s get Rs.1 to Dollars, pounds and yens
    Whatever is possible by every Tamil

    Please provide us details, so that Tamils worldover can contribute to this

  2. ila / Jan 30 2009 5:33 பிற்பகல்

    வெங்கடேஷ்,
    உயிருக்கு மதிப்பளிக்கும் இந்தக் காரியத்திற்கு என் கண்டனகள். அவருடைய உயிர் ஒரு உன்னத விசயத்திற்காக போயிருக்கு. அதுக்கு பிரதிபலனா காசா?

  3. P.V.Sri Rangan / Jan 30 2009 5:57 பிற்பகல்

    நண்பர்களே,வணக்கம்!இது, அவசியமான பணி.அவர் தனது உயிரையே தமிழர்களுக்காக வழங்கியுள்ளார்.அவரது குடும்பத்தை இந்தத் தமிழ் காத்தாகவேண்டும்.விபரங்களை அறியத்தாருங்கள்.நாம் எதையுஞ் செய்ய ஆவலாக இருக்கிறோம்.

    ஸ்ரீரங்கன்

  4. சுரேஷ் ஜீவானந்தம் / Jan 30 2009 5:59 பிற்பகல்

    கருணாநிதி கொடுக்கும் பணத்தை பெறுவது அவரது உயரிய நோக்கத்தைக் கொச்சைப் படுத்துவதாகவிடும்.
    நிதி திரட்டப்பட வேண்டும். பெற்றோரின் தேவைக்கு அளித்தது போக, முத்துக்குமாரின் விருப்பப்படி அவரது அறிக்கையை நகலெடுத்து அனைவரிடமு சேர்க்க மீதிப் பணம் பயன்படுத்தப்பட வேண்டும்.

  5. KUURINJIL / Jan 30 2009 7:11 பிற்பகல்

    GOOD THOUGHT…..

  6. அர டிக்கெட்டு ! / Jan 30 2009 7:25 பிற்பகல்

    முத்துக்குமார் சாலை விபத்தில் இறந்தவரல்ல நட்டஈடு கொடுக்க, அவரது மரணம் ஒரு அரசியல் பிரச்சாரம்! அவரது தியாகத்தை மதிப்பவர்கள் அவரது சடலத்தை பார்க்க போகட்டும், அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளட்டும், அவரது அறிக்கையை பல நூறு பேர்களுக்கு சுற்றுக்கு விடட்டும், ஈழ விடுதலைக்காக நடைபெறும் ஆர்பாட்டங்கள், போராட்டங்கள், மறியல்கள் போன்றவைகளில் கலந்துகொள்ளட்டும், இந்திய மேலாதிக்கத்தையும், துரோகத்தையும், சிங்கள இனவெறியையும் பிரச்சாரம் செய்யட்டும், ஈழத்து மக்களின் துன்பங்களை பாடல்களாய், படங்களாய், காட்சிகளாய் உலகெங்கும் பரப்பட்டும், மொக்கை பதிவிடுவதை தவிர்த்துவிட்டு மக்களின் துயரங்களை பற்றி பிரச்சாரம் செய்யட்டும்….இன்னும் என்னவெல்லாம் முடியுமோ களத்தில் இறங்கி செய்யவேண்டும்…. இதையெல்லாம் செய்த பின் பணமும் தந்தால் நலம் இல்லையென்றாலும் பரவாயில்லை… ஆனால் இதையெதுவம் செய்யாமல் வெறும பணத்தை மட்டும் கொடுப்பதோ, அல்லது பணம் கொடுப்பதை பற்றி பிரச்சாரம் செய்வதோ ஒரளவு செயல்துடிப்பு உள்ளவர்களையும் பணம் கொடுத்தால் போதும் என முடங்கச்செய்யவே உதவும் இதற்கு கருணாநிதியின் 2 லட்சம் எவ்வளவோ மேல்!.

  7. Sampath / Jan 31 2009 3:53 மு.பகல்

    கருணாநிதி கொடுக்கும் பணத்தை பெறுவது அவரது உயரிய நோக்கத்தைக் கொச்சைப் படுத்துவதாகவிடும்.
    நிதி திரட்டப்பட வேண்டும். பெற்றோரின் தேவைக்கு அளித்தது போக, முத்துக்குமாரின் விருப்பப்படி அவரது அறிக்கையை நகலெடுத்து அனைவரிடமு சேர்க்க மீதிப் பணம் பயன்படுத்தப்பட வேண்டும்.

    இது, அவசியமான பணி.அவர் தனது உயிரையே தமிழர்களுக்காக வழங்கியுள்ளார்.அவரது குடும்பத்தை இந்தத் தமிழ் காத்தாகவேண்டும்.விபரங்களை அறியத்தாருங்கள்.நாம் எதையுஞ் செய்ய ஆவலாக இருக்கிறோம்.

  8. அருள் / Jan 31 2009 4:02 மு.பகல்

    இந்த பணம் கண்டிப்பாக அவருடைய உயிருக்கான விலை இல்லை……அது விலைமதிப்பற்றது…மகனை பிரிந்து வாடும் அவாருடைய குடும்பத்தார்க்கு நம்மாலான சிறு உதவி……அதோடு நீலிகண்ணீர் வடிக்ககும் ஆளும்வர்கத்தின் முகத்தில்கரியை பூசவும்………

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.