சங்கராபுரம் தியாகராஜபுரம் ரோட்டில் ஊராட்சி ஒன்றிய உருது தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த வருடம் 60 மாணவர்கள் பயின்று வந்தனர்.

இந்த கல்வி ஆண்டில் கூடுதல் மாணவர்களை பள்ளியில் சேர்க்க ஆமினா கல்வி அறக்கட்டளை சார்பில் தினந்தோறும் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உதவித்தோகையாக தினமும். ரூ.1 வீதம் வழங்கப்படும் என அறிவிப்கப்பட்டது. இந்த திட்டத்தில் விடுமுறை நாட்களிலும் பள்ளி செயல்படாத நாட்களிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது இல்லை என்று கூறப்படுகிறது. நேற்று பள்ளி தொடங்கிய முதல் நாளில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

Advertisements