மிரம்மாண்டமான கூடாரம், பெரிய பெரிய விளம்பர தட்டிகள், ஊரெங்கும் கலர் கலராக போஸ்டர், பார்த்த பரவத்தோடு விவரிக்கும் பள்ளி நண்பன், தெரியாத பார்த்திராத பல மிருகங்கள் என ஒருகாலத்தில் ஒரு கணவு உலகமாக இருந்த இந்த சர்க்கஸ் இப்போது என்னவோ பார்க்கவே அறிதாக போய் விட்டது. கடந்த வரத்திலிருந்து புதுவையில் ஒரு சர்க்கஸ் என்றவுடன் என் பழைய நினைவுகளுடன் என் சகோதரியின் குழந்தைகளை அழைத்துக்கொண்டு புதுவையில் முகாமிட்டுள்ள Great Bombay Circus சென்று வந்தேன். பிறகு தான் தெரிந்தது ஏன் குழந்தைகளையும் அழைத்து சென்றோம் என்று. என் மனதில் இருந்த பழய சர்கஸ் நினைவுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது. இப்போது நிறைய பெண்கள் மிக குரைந்த ஆடையுடன் தம்மை நெளிய வைப்பது என்னவோ உண்மை. (சின்ன பையன் என்னைபார்த்து முறைக்கிறான்) ஆனால் இதை காண வந்த இளைஞர்கள் இவர்களின் சாகசங்களை பாராட்டுகிறார்களோ இல்லையோ மிக மோசமாக விமரிசித்ததுதான் பதிவு எழுத தூண்டியது இந்த கவர்ச்சி தேவையா என்று.

மேலும் நான் சிறுவயதில் பார்த்த பல நிகழ்ச்சிகள் இப்போது இல்லை. ஆனால் புதிய வடிவமாக ரஷ்யாவில் இருந்து பல கலைஞர்கள் இப்போது சாகசம் புரிகிறார்கள்!! முக்கியமாக பெண்கள். ஆண்களின் பங்களிப்பு மிக குறைந்த அளவே உள்ளது. பல மிருகங்களும் இல்லை வெறும் யானை. குதிரை மற்றும் ஒட்டகங்கள் தான் உள்ளன குறைந்த அளிவில் பறவைகள் மற்றும் நாய்கள் அவ்வளவே அதனால் குழந்தைகள் மிகவும் ஏமார்ந்து போனார்கள்.

மிகவும் பழையான இந்த கலையை மிகவும் சிறமத்துடனேயே நடத்துவதாக இந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய இந்த அரங்கில் வெறும் 100 முதல் 150 நபர்கள் மட்டுமே இருந்தோம்.

இப்படியே போச்சுன்னா சர்க்கஸ நாம பதிவுகள்ள தான் பாக்கமுடியும். என் குழந்தைபருவத்தில் எனக்கு ஏற்பட்ட சர்க்கஸ் அனுபவம் இப்போதைய குழந்தைக்கு கிடைக்கவில்லை அடுத்த தலைமுறைக்கு எப்படி ?

Advertisements