இந்தியா வந்துள்ள இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ வெங்கடாஜலபதியை வழிபட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

இராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை அரசு எந்தத் தொந்தரவையும் தரவில்லை என்றும். இலங்கை அரசின் நல்ல பெயரைக் கெடுக்கும் நோக்கில் மீனவர்களைத் தாக்குவது விடுதலைப்புலிகளாக இருக்கக்கூடும் என்று நான் கருதுகிறேன் என்றும் விடுதலைப்புலிகள் பிரச்சினை எப்போது தீரும் என்று இப்போது பதிலளிப்பது கடினம். இருப்பினும், விடுதலைப்புலிகளின் நடவடிக்கையைத் தடுக்க இலங்கை அரசு அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. சார்க் அமைப்பின் மாநாடுகளில் விடுதலைப்புலிகள் பிரச்சினையை இலங்கை அரசு எழுப்பி வந்திருக்கிறது. கொழும்பில் நடைபெறவுள்ள 15ஆவது சார்க் மாநாட்டிலும் இப்பிரச்சினையை எழுப்புவோம் என்று தெரிவித்துள்ளார்.

Advertisements