நான் ஒரு எறும்பைக் கொன்றேன்
என் மூன்று குழந்தைகள் அதை
நிசப்தமாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஜென் கவிதையை துணையெழுத்து புத்தகத்தில் ராமகிருஷ்ணன் அவர்கள் நிறமில்லாதொரு குடும்பம் எனும் கட்டுரையில் மேற்கோள் காட்டியிருப்பார்.

அவரின் மேற்கோளைப்போலவே நாமும் நம்முடைய குரூரங்களை அடுத்த தலைமுறையிடம் தான் காட்டிக்கொண்டிருக்கிறோம்.  நாளைய தலைமுறைக்கு நாம் சேர்த்து வைக்கவேண்டிய விடயங்கள் பல உண்டு அதில் முக்கியமானது மொழி மற்றும் தற்காலத்தில் நிகழ்ந்த உலகிற்கு எளிதில் அறியப்படாத பல விடயங்களை வெளியில் தெரிய வைப்பதும் அடுத்த தலைமுறை அதை படித்து பயன்படும் வடிவில் பாதுகாப்பதும் தான்.

சில பதிவர்கள் இப்பணியை செய்கின்றனர் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் யாராவது இது போன்ற பணியில் ஈடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தங்கள் அவர்களுக்கு என ஒரு புதிய பக்கத்தை திரட்டி.காம் தளத்தில் வெளியிடலாம். இது நாம் அவர்களுக்கு செய்யும் சிறு உதவி.

Advertisements