ஓரு முகவர் மூலம் 2007 ஆண்டு Bajaj Allianzல், பாலிசி எடுத்தேன். மூன்றான்டுகள் மட்டும் பணம் கட்டினால் போதும் 20 ஆண்டுகள் வரை அந்த பாலிசி பலன் தரும் எனவும் 3 ஆண்டுகள் லாக்இன் பீரியட் எனவும் 4 ஆம் ஆண்டு கட்டிய பணத்தை விரும்பினால் எந்த கட்டணமும் இல்லாமல் திரும்ப பெற முடியும் எனவும் ஒரு கிளை மேளாலரால் மடிக்கணினி மூலம் தெளிவாக விளக்கப்பட்டது.

இதன் பொருட்டு என் சுற்றத்தாருக்கும் இதை பரிந்துரைத்தேன். நானும் ஒரு பெரும் தொகையை முதலீடு செய்தோன். இரண்டு வருடங்கள் கட்டிய பிறகு சில நாட்களுக்கு முன் ஒரு விளக்கத்திற்காக கிளைக்கு சென்று விசாரித்ததில் முதலில் கூறிய எந்த நடைமுறையும் இல்லை என்றும் 20 ஆண்டுகள் நான் பணம் கட்ட வேண்டும், இல்லை என்றால் பாலிசி காலாவதியாகிவிடும் எனவும், மீறி 4 ஆம் வருடம் திரும்ப பெற நினைத்தால் மீதம் உள்ள பணத்தில் 55.90 விழுக்காடு கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

இது குறித்து கிளை அதிகாரியை பார்க்க வேண்டும் என தெரிவித்த போது மார்கெட்டிங் மேனேஜரை கொண்டு போச்சுவார்த்தை நடத்துகிறார்களே தவிர ஒரு உரிய பதில் தரவில்லை. மேலும் அந்த மார்கெட்டிங் மேனேஜர் ”வாங்குறவனுக்தான் அக்கற இருக்கனும் விக்கரவன் எதையாவது சொல்லிதான் விப்பான்” என பொறுப்பற்ற முறையில் கூறுகிறார்.

55.90 விழுக்காடு கட்டணம் என்பதை பலிசி டாக்குமெண்டில் ஒரு சாதாரண மனிதன் புரிந்துகொள்ள முடியாத படி கணித குறியீடான 1-(1/1.09)^N இதை காண்பித்தனர் அதை விளக்க சென்னபோது விளக்க முடியாமல் திணறினர். ஆனால் 55.90 விழுக்காடு கட்டணம் உண்டு என சொல்கிறார்கள். இதை எழுத்து மூலம் தரவும் மறுத்துவிட்டார்.

நான் கேட்ட அல்லது எனக்கு விளக்கப்பட்ட பாலிசியை எனக்கு அவர்கள் தரவில்லை அதற்கு பதில் ஏதோ ஒன்றில் என்னை மாட்டிவிட்டு அலைகழிக்கிறார்கள்.

என்னைப்போல் மேலும் ஒருவரும் இதே பிரச்சனையில் உள்ளது தெரியவந்துள்ளது.

இணைய நண்பர்களே!! இது போன்ற அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டிருந்தாலும் அல்லது அறியாமல் இருந்தாலும் உடன் உங்களுக்கு அருகில் உள்ள Bajaj Allianz கிளையை அனுகி விளக்கம் பெறவும்

Advertisements