திரட்டி.காம் இன்றுடன் 13 மாதங்களை கடந்திருக்கிறது. இது வரை நான் திரட்டியை வடிவமைக்க பயன்படுத்திய மென்பொருட்கள் பற்றியும் அதற்கு உதவியவர்கள் பற்றியும் இந்த பதிவு.

நான் முதலில் பயன்படுத்தியது திறவுமூல மென்பொருளான Lylina rss aggregator ஐ தான், இதை முகுந்த் அவர்களின் தமிழ்பிளாக்ஸ்.காம் தளத்தின் மூலமே அறிந்து பயன்படுத்தினேன்.

இதில் பல பிரச்சனைகளை சந்திக்கவேண்டியிருந்தது முதல் 3 மாதங்கள் மட்டுமே பயன்படுத்தினேன்.

இரண்டாவதாக நான் பயன்படுத்தியது FoFRedux எனும் திறவுமூல மென்பொருளை, மிகவும் எளிதான, எனக்கு பிடித்த, மென்பொருள் இது. இந்த மென்பொருளை தமிழ்சசியின் பதிவின் மூலமே அறிந்து கொண்டேன். இந்த மென்பொருளின் சில பிரச்சனைகள் காரணமாக புதிய வசதிகள் எதையும் அறிமுகம் செய்ய முடியவில்லை இருப்பினும் பதிவர்களின் திரைவெட்டை முதலில் காண்பிக்கும் படி வடிவமைத்திருந்தேன். பிறகு பதிவின் படங்களை காட்டும் படி வடிவமைத்தேன் நண்பர்கள் பலர் இதை பாராட்டினர்.

முகப்பு பக்கத்திற்கு wordpress தளத்தின் template ஒன்றை கஸ்டமைஸ் செய்து பயன்படுத்தினேன்.

தற்சமயம் அதிக பதிவர் மற்றும் பதிவை திரட்டும் வேகத்திற்காகவும் வழங்கியின் பலுவை குறைக்கும் விதத்தில் மேலே குறிப்பிட்ட எந்த மென்பொருளையும் பயன்படுத்தாமல் SimplePie ஐ பயன்படுத்தி நானே சொந்த திரட்டி மென்பொருளை வடிவமைத்துவிட்டேன். சில FoF வசதிகளையும் பயன்படுத்திக்கொள்கிறேன்.

இப்போது திரட்டியின் வேகம் கூடியிருப்பதுடன் திரட்டும் திறனும் மேம்பட்டிருக்கிறது.

Advertisements