ஈழத்தமிழர்களை கொன்று குவித்து வரும் சிங்கள அரசைக் கண்டித்தும், சிங்கள அரசிற்கு தொடர்ந்து உதவி புரிந்து வரும் இந்திய அரசைக் கண்டித்தும், ஈழத்தில் உடனடியாக போர் நிறுத்தம் அமலாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இளந்தமிழர் இயக்கம் சார்பில் தமிழகம் முழுக்க பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

பல்லாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழினம் இன்று நாதியற்ற நிலையில் உள்ளது. ஈழத்தில் தமிழர்களை மலைமலையாகக் கொன்று குவித்து வரும் சிங்கள அரசுக்க எதிராக 10 கோடி தமிழர்கள் உலகெங்கும் இருந்து போராடியும் கூட நமக்கு சர்வதேசம் செவிசாய்க்கவில்லை. அதற்குக் காரணம் இந்தியாவின் சிங்களச் சார்பு நிலைபாடே. தமிழகத்தில் உள்ள இந்தியத் தமிழர்களை சிறிதளவும் இந்திய அரசு மதிக்கவில்லை என்பதும் புலனாகிறது.

மேலும் படிக்க

Advertisements