ஆகஸ்ட் மாத துவக்கத்தில் திரு. காசி அவர்கள் எனக்கொரு மின்னஞ்சலை சில கேள்விகளோடு அனுப்பியிருந்தார் அந்த கேள்விகளையும் பதிலையும் பதிவாக வெளியிடுமாறு ஒரு மின்னஞல் வர இப்போது இது பாதிவாக… (பதிலைக்கண்டு ஆட்டோ அனுப்ப மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.)
1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம்
செய்யவேண்டும்?

நிச்சயமாக போதுமான உள்ளடக்கங்கள் இல்லை! கதை, கட்டுரை, விமர்சனம் மற்றும் கவிதை போன்றவற்றில் உள்ள அளவை விட இலக்கியத்தையும் தமிழ் மருத்துவம் அறிய தமிழ் நூல்களை, புதிய அகரமுதலிகள் அளவு மிகச்சிறியது. நிச்சயம் இதன் அளவை மேம்படுத்தல் அவசியம். மேலும் இணையத்தில் தமிழ்வழி கல்வி பயிற்றல், பிறமொழிகளில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பான், மிக முக்கியமாக யுனிகோட் முறையில் தட்டச்ச மற்றும் அதை தனது கணினியில் முடுக்கிட போதுமான வழிகாட்டல் அவசியம். இது தமிழில் புழங்க தன் கருத்துகளை கட்டுரைகளை வெளியிட அடிப்படை தூண்டுகோலாக அமையும்.

2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம்
அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு,
குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

இன்னும் முழுமையாக அனுபவிக்கவில்லை என்பது என் எண்ணம். இணையத்தில் மின்னஞ்சல் பயன்படுத்தூவோர் எண்ணிக்கையும் அதில் தமிழில் வலைப்பதிவோர் எண்ணிக்கையும் மிக அதிக அளவு வித்தியாசம் உள்ளது. வலைப்பதிவுலகையும், தமிழில் இணைய குழுக்களையும் தவிர்த்து தமிழ் பயன்பாடு மிகக் குறைவு. ஆனால் தாங்கள் குறிப்பிட்ட வெப் 2.0 ஊடகங்களின் எழுச்சி தற்சமயம் மிக அதிக அளவில் உள்ளது. இது ஒரு நல்ல துவக்கம். இருந்தும் தமிழில் ஊடாடுதல் என்பது ஒரு சிரிய வட்டத்துக்குள்ளாகவே இருக்கிறது உதாரனம் ஜிடாக், ஆர்குட், கூகுல் குருப்ஸ் போன்றவை, மின்வணிகம் மற்றும் அரசாளுமை இன்னும் துவக்க நிலையிலேயே உள்ளது.

3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின்
பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த
அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும்
முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?

இணையத்தில் தமிழ் பயன்பாட்டை அதிகரிக்க செய்தவற்றில் முதலில் நிற்பது மற்றும் மிக முக்கியமான பங்களிப்பு செய்தது. ஏ-கலப்பை மென்பொருள் தான். இதனைக்கொண்டே இன்றும் பலர் தங்களின் தமிழ் உள்ளீடுகளை செய்கின்றனர் பிறகு வந்த என் ஹச் எம் மென்பொருளும் மிக முக்கியமானது. இம் மென்பொருட்கள் குறித்த பயிற்சியும் போதுமான வழிகாட்டலும் தமிழை இணையத்தில் மேலும் வளர்க்க மிகவும் உதவும்.

தமிழை வளர்ப்பதில் சிறப்பானதாக நான் கருதுவது.

 • Infitt.org
 • மதுரைத்திட்டம்.
 • தமிழ் விக்கிப்பீடியா
 • தமிழ்வலைப்பதிவு திரட்டிகள்.
 • வலைப்பதிவுகள்
 • செய்தி ஊடகங்கள்
மேலும் முன்னொடுத்துச் செல்லவேண்டியவை
 • தமிழ் OCR
 • பல புதிய தமிழ் எழுதிகள் மற்றும் எழுத்துரு மாற்றி மென்பொருட்கள்
 • பிரத்தியேக தமிழ் தேடுபொறி (படங்களில் உள்ள யுனிகோட் எழுத்துகளையும் தேடும் திறனுடன்)
 • மின்வணிகம் மற்றும் பண பரிவர்தனை தளங்கள்
 • தமிழ்படுத்தப்பட்ட திரமூல மென்பொருட்கள்
 • மின்னூல் திட்டங்கள்.
4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?
 • அறிய தமிழ்புத்தகங்களை மின்னூலாக்குவதே என் முதல் பணியாக இருக்கும் அவற்றை தேட படிக்க இலகுவாக்குவதற்கு வருடப்பட்ட பழைய புத்தகங்களை தமிழ் ஓசிஆர் கொண்டு யுனிகோட் வடிவில் மாற்றுவது. தேடுபெறிகளில் மற்றும் மக்கள் பார்க்கும் இடங்களில் இலகுவான தேடல் வசதியோடு ஒரு மின்னூலகம் அமைப்பது.
 • தமிழில் இருந்து பிற மொழிகளுக்கும், பிற மொழிகளில் இருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்பு மென்பொருள் உருவாக்குவது.
 • தமிழ் கலைக்கலஞ்சியங்கள் உருவாக்குவது.
 • தேவையான அனைத்து மென்பெருட்களையும் தமிழிலேயே உருவாக்குவது.
 • யுனிகோட் வசதியில்லாத கைப்பேசியிலும் தமிழை பயன்படுத்த வகை செய்வது.
 • இணையத்தில் உள்ள அறிஞர்களின் கருத்துகளை கேட்டு சிறந்த தமிழ் மென்பொருள் மற்றும் புதிய படைப்புகளை (உதாரணம் தாங்கள் அமைத்த தமிழ்மணம் திரட்டி போன்று) அரசின் நிதியுதவியோடு செயல்படுத்துவது.
 • ஆர்வமுள்ள மாணவர்களுக்கு யுனிகோட் மற்றும் தமிழ் தட்டச்சும் முறைகளை மென்பொருட்களை இலவசமாக வழங்கி கற்றுத்தருவது.
 • கிராமப்புற மாணவர்களுக்கு பயிற்சிப்பயிலரங்குகள் பல நடத்தி இணையத்தில் தமிழையும் அதன் பயன்பாட்டையும் வசதிகளையும் குறித்து விளக்குவது.
5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?

வலைப்பதிவுகள் சற்சமயம் வரை ஒரு டைரி குறிப்புகள் போலவும் கையெழுத்துப்பிரதிக்கு மாற்றாகவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இங்கே கருத்து மேதல்களும் உண்டு என்பதால் புதிதாக வருபவர்கள் தங்களின் எழுத்தக்களத்தை வளப்படுத்திக்கொள்ளவும் தமிழில் எழுதும் திறனை வளர்த்துக்கொள்ளவும் ஒரு பயிற்ச்சிக்கலமாக இதை பயன்படுத்தி தன் திறமைகளை வளர்த்துக்கொள்ளலாம் பிறகு உபயோகமான கருத்துக்செறிவு மிக்க ஆக்கங்களை படைத்தால் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக அமையும், ஒரு போதும் பின்னூட்டத்திற்காகவும், ஓட்டிற்காகவும் ஆக்கங்களை எழுதவேண்டாம் இப்படிப்பட்ட ஆக்கங்களின் ஆயுள் மிகவும் குறைவு.


6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

என்னையும் சேர்த்து பலரை வலைப்பதிய வைத்த பெருமை தமிழ்மணத்தையே சேறும். பல புதிய நண்பர்களையும் புதிய ஆக்கங்களையும் தேடி அலையாமல் என்னருகே சேர்த்த ஒரு நண்பன் தமிழ்மணம் யுனிகோடைப்பற்றியும் தமிழை இணையத்தில் பயன்படுத்தலாம் என்பதையும் நான் தமிழ்மணம் கொண்டே அறிந்தேன். மேலும் பதிவுகளைமட்டும் திரட்டாமல் பதிவின் பின்னூட்டத்தையும் திரட்டுவது இதன் தனிச்சிறப்பு அழகியவடிவம் எளிமையான தோற்றம் திகட்ட திகட்ட ஆக்கங்கள் என பெலிவான தாய் வீடு தமிழ்மணம். ஆரம்ப நாட்களில் இதன் பூங்கா இதழ் பலரையும் கவர்ந்தது. ஏனோ இப்போது அது இல்லை. என் தமிழ்மணம் ஆண்டுகள் பல கடந்து தனது சேவையை வழங்க வேண்டும். வாழ்த்துகள்.

தமிழ்மணம் செய்யவேண்டியது:
தமிழ்மணம் வலைப்பதிவு திரட்டியாக மட்டும் ஏன் நிற்க வேண்டும் இதை ஒரு போர்ட்டலாக மாற்றலாமே! சொந்த செய்திகள், மின்வணிகம், மின்னூலகம், தமிழ்மணம் உரையாடி போன்று புதிய பகுதிகள் வலைப்பதிவை தவிர்த்து புதிய பகுதிகளாக வந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றே நினைக்கிறேன். மேலும் இதுநாள் வரை தமிழ்மணம் சோமித்துள்ள தகவல்களை கொண்டு பயனுள்ள வகையில் ஏதாவது செய்தால் நன்று!!

அன்புடன்
வெங்கடேஷ்.

Advertisements