புதுவையில் கடந்த காரிக்கிழமை மாலை ஒரு இனிய நிகழ்வாக நடைபெற்ற தமிழ் கணினி மற்றும் இணைய பயன்பாடு தொடர்பான கருத்தரங்கில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

புதுவை வலைப்பதிவர் சிறகம் சார்பில் தமிழ் கணினியும் இணைய பயன்பாடும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் வணிக அவையில் நடைபெற்றது. காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மைய தமிழ் துறை பேராசிரியர் இளங்கோ தலைமை தாங்க, சீத்தா பிரபாகரன் வரவேற்றார். திரட்டி.com வெங்கடேஷ், பாரதியார் பல்கலைக்கூட விரிவுரையாளர் ராசராசன், விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் தமிழ்நம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதுவை ஒருங்கிணைப்பாளர் இரா. சுகுமாரன் துவக்க உரையாற்ற, வலை வடிவமைப்பாளர் மோகனகிருஷ்ணன் தமிழ் எழுத்துருக்கள் அதன் பயன்பாடுகள் என்ற தலைப்பிலும், கணினி மென்பொறியாளர் அருணபாரதி தமிழில் மென்பொருட்கள் என்ற தலைப்பிலும், உலக தகவல் தொழில்நுட்ப மன்ற பொதுக்குழு உறுப்பினர் கோ. சுகுமாரன் அவர்கள் தமிழில் வலைப்பதிவுகள் என்ற தலைப்பிலும், தமிழில் இயங்குதளங்கள் என்ற தலைப்பில் சீனுவாசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

பாராட்டு

இப்படி ஒரு மிகப்பெரிய நிகழ்வை சிறமங்கைளை எல்லாம் பொருட்படுத்தாது ஏற்பாடு செய்யும். நமது ஒருங்கினைப்பாளர் இரா. சுகுமாரன் அவர்களுக்கு, இதில் திட்டங்கள் வகுக்கவும் அவற்றை செயல்பட உறுதுணை புரியும் கோ. சுகுமாரன் அவர்களுக்கும் இதில் கலந்துகொண்ட அனைத்து தமிழ் கணினி வழி பயில நினைக்கும் அனைவருக்கும்.

மேலும் ஒரு நிகழ்வாக வந்திருந்த கருத்தரங்க பார்வையாளர் ஒருவர் நிகழ்வை பாராட்டி தன்னிடம் உள்ள இடத்தில் இது போன்ற நிகழ்வுகளை நீங்கள் இலவசமாக நடத்திக்கொள்ள அனுமதிப்பதாகவும் எந்த உதவி தேவைப்படினம் செய்வதாகவும் உறுதியளித்தார். அவர் ஒரு கல்வெட்டு ஆராய்ச்சியாளர் என்பது பிறகு தெரிந்தது.

Advertisements